Thn drunken guy 
மாவட்ட செய்திகள்

கோவில் முன்பு மது அருந்தியபடி ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர் மீது போதைக் கும்பல் சரமாரி தாக்குதல்..!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே, கோவில் முன்பு ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த போதை கும்பலை தட்டிக்கேட்ட இளைஞர், கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Web Team

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே, கோவில் முன்பு ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த போதை கும்பலை தட்டிக்கேட்ட இளைஞர், கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமய கவுண்டன்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள அம்மன் கோவில் அருகே, போதை ஆசாமிகள் சிலர் இரவில் மது அருந்தியபடி ஆபாசமாக பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த சபீர் என்பவர், அக்கும்பலை தட்டிக்கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த போதைக்கும்பல், சபீர் வீட்டின் கதவு, ஜன்னல் மற்றும் குடிநீர் குழாய்களை அடித்து நொறுக்கியதுடன், அதனை தடுக்க வந்த சபீர், அவரது மனைவி மற்றும் சகோதரரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.