NMK Drug atrocity 
மாவட்ட செய்திகள்

கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் மக்களை மிரட்டி வழிப்பறி

மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Web Team

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட மூவர், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். கடந்த மாதம் 26ஆம் தேதி ராசிபுரம் பட்டணம் சாலையில், இளைஞர்கள் 5 பேர் கஞ்சா போதையில் பட்டா கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதோடு, மிரட்டி வழிப்பறியிலும் ஈடுபட்டனர். அவர்களுள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மூவர் மீதும் ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன இருப்பதால், மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.