KRR Bus 
மாவட்ட செய்திகள்

டூரிஸ்ட்வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து

டூரிஸ்ட் வேன் பின்னால் வந்த அரசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதன் மீது மோதியது.

Web Team

கரூர் அருகே மண்மங்கலத்தில் டூரிஸ்ட் வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், சபரி மலைக்கு வேனில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சின்ன சேலத்தில் இருந்து சபரி மலைக்கு சென்று கொண்டிருந்த பக்தர்களின் டூரிஸ்ட் வேன் பின்னால் வந்த அரசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதன் மீது மோதியது.