காரைக்காலில் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்காலில் சிக்கி உயிருக்கு போராடிய குதிரையை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.கழிவு நீர்வாய்காலில் உணவுக்காக குதிரை தலையை அடியில் விட்டபோது அதன் தலையும் வயிற்றுப் பகுதியும் பலமாக சிக்கி காயங்களுடன் உயிருக்கு போராடியது.இந்நிலையில் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.