4 
மாவட்ட செய்திகள்

பி.சாண்ட் மணல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து.. பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் மீது கொட்டிய மணல்.. மணலுக்குள் புதைந்த 4 பெண்களை மீட்ட மக்கள்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பி.சாண்ட் மணல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, மணலுக்குள் புதைந்த 4 பெண்களை அப்பகுதியில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர். கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆனஸ்ராஜ் மதுபோதையில் வாகனத்தை இயக்கிய போது, அந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

Srini Vasan

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே பி.சாண்ட் மணல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, மணலுக்குள் புதைந்த 4 பெண்களை அப்பகுதியில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர்.

கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆனஸ்ராஜ் மதுபோதையில் வாகனத்தை இயக்கிய போது, அந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது, கொண்டையம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்த 4 பெண்கள், பி.சாண்ட் மணலுக்குள் புதைந்தனர்.

இதனை கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கைகளாலும், ஜேசிபி இயந்திரம் மூலமும் மணலை அப்புறப்படுத்தி பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.