சேலம் மாவட்டத்தில், இரிடியம் விற்பனையில், பல கோடி ரூபாய் மோசடி செய்த பாமக நிர்வாகி உட்பட இரண்டு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ஓமலூரை சேர்ந்த செல்லைத்துரை மற்றும் பவானியை சேர்ந்த பாமக நகர செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் ரிசர்வ் வங்கி பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து, இரிடியம் விற்பனையில் பல கோடி ரூபாய் கிடைக்கும் எனக் கூறி 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, லாசர் என்பவர் சேலம் சிபிசிஐடி போலீசில் புகாரளித்தார்.
பின்னர் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், செல்லத்துரை மற்றும் தினேஷ்குமாரை அதிரடியாக கைது செய்து நான்கு செல்ஃபோன், ஒரு லேப்டாப், மோசடி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இருவரும் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், இது போன்று பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.