CHN Auto accident 
மாவட்ட செய்திகள்

சாலையில் சென்ற ஆட்டோ மீது சாய்ந்து விழுந்த பனைமரம்

கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை வளாகத்தில் இருந்த பனைமரம் சாய்ந்து ஆட்டோ மீது விழுந்தது.

Web Team

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை வளாகத்தில் இருந்த பனைமரம் சாய்ந்து ஆட்டோ மீது விழுந்ததில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித், நுங்கம்பாக்கத்தில் இருந்து 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அயனாவரத்திற்கு சவாரி அழைத்துச் சென்றார். கீழ்ப்பாக்கம் - மேடவாக்கம் டேங்க் சாலையில் சென்ற போது, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை வளாகத்தில் இருந்த பனைமரம் சாய்ந்து ஆட்டோ மீது விழுந்தது. அதில் ஆட்டோ ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து சென்ற பள்ளி மாணவி காயமின்றி தப்பினார்.