DGL School van 
மாவட்ட செய்திகள்

நெடுஞ்சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனம்

பிரபல தனியார் பள்ளி வாகனம், மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

Web Team

திண்டுக்கல் அருகே தனியார் பள்ளி வாகனம் நெடுஞ்சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முள்ளிப்பாடி அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி வாகனம், மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.