gold 
மாவட்ட செய்திகள்

ஒரு சவரன் தங்கம் ரூ.81,200 - புதிய உச்சம்

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டு, சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, 81 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Web Team

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டு, சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து, 81 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால், குடும்ப நிகழ்ச்​சிகளுக்​காக தங்கம் வாங்க எண்​ணி​யிருந்​தோர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பின் அடிப்​படை​யில் தங்​கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26ஆம் தேதி முதல், தங்​கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்​தது.

அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு ஆகிய காரணங்​களால் தங்​கத்தின் விலை மேலும் உயர்ந்​து, நாள்​தோறும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்டு வருகிறது.

கடந்த 6ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்​கம் 80,000 ரூபாயை தாண்​டி, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்டது. அதன் பின்னர் தொடர்ந்து, தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

சென்​னை​யில் இன்று, செப்டம்பர் 9ஆம் தேதி செவ்வாய்கிழமை, 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை மேலும் உயர்ந்​து, மீண்​டும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது.

ஒரு சவரன் - ரூ.720 உயர்வு
ஒரு சவரன் - ரூ.81,200
ஒரு கிராம் - ரூ.90 உயர்வு
ஒரு கிராம் - ரூ. 10,150

ஒரு கிராம் வெள்ளியின் விலை 140 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,40,000 ரூபாயாகவும் உள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை உயரவே வாய்ப்பு உள்​ளது என்று வியாபாரிகள் கூறுவதால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.