சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சீசர் என்ற மோப்ப நாய்க்கு சிறப்பு மரியாதை கொடுக்கப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ள சீசர் என்ற மோப்ப நாய், விமான நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில் எட்டு வயதை கடந்ததை அடுத்து திங்கட்கிழமை ஓய்வு வழங்கப்பட்டது.
இதையடுத்து பழவந்தாங்கலில் உள்ள CISF unit வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சீசருக்கு, விமான நிலைய அதிகாரி தீபக், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் சக பணியாளர்களான மோப்ப நாய்கள் சல்யூட் அடித்து சீசரை வழி அனுப்பி வைத்தன.