விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். கிருஷ்ணகிரியை சேர்ந்த 5 நண்பர்கள் புதுச்சேரிக்கு காரில் சென்று திரும்பிய நிலையில் முன்னாள் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்தது. காரில் இருந்த இரண்டு பெண்களுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டது.