RMD Accident 
மாவட்ட செய்திகள்

டாடா மேஜிக் வாகனம் சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதியது

அரிச்சல் முனை கடற்கரை நோக்கி சுற்றுலா வேன் சென்ற போது எதிரே வந்த டாடா மேஜிக் வாகனம் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.

Web Team

ராமேஸ்வரத்தில் டாடா மேஜிக் வாகனமும் மேக்சி கேப் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல் முனை கடற்கரை நோக்கி சுற்றுலா வேன் சென்ற போது எதிரே வந்த டாடா மேஜிக் வாகனம் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.