Madurai railway station 
மாவட்ட செய்திகள்

மதுரை ரயில் நிலையத்தில் சுமார் ரூ.75 லட்சம் பறிமுதல்... 450 கிராம் தங்கம், 26 கிராம் வெள்ளியும் பறிமுதல்

மதுரை ரயில் நிலையத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த இரண்டு இளைஞர்களிடம் இருந்து சுமார் 75 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 450 கிராம் தங்கம், 26 கிராம் வெள்ளியை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

Web Team

மதுரை ரயில் நிலையத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த இரண்டு இளைஞர்களிடம் இருந்து சுமார் 75 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 450 கிராம் தங்கம், 26 கிராம் வெள்ளியை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

ஒன்றாம் எண் நடைமேடையில் உள்ள பார்சல் அலுவலகம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இளைஞர்களை விசாரித்து சோதனை செய்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இருவரும் கோவில்பட்டியில் வசித்து வருவதாக தெரிவித்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.