RMD SIR ADMK 
மாவட்ட செய்திகள்

உயிரிழந்தவர்களின் பெயர்கள் SIR படிவங்களில் சேர்ப்பு

நகராட்சி ஆணையர் தாமரையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Web Team

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் SIR படிவங்களில் உயிரிழந்தவர்களின் கையொப்பமிட்டு பதிவேற்றம் செய்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள், கடந்த 20 வருடங்களில் வெளியூருக்கு இடம் பெயர்ந்து சென்றவர்கள் என சுமார் 5 ஆயிரம் பேரின் பெயர்கள் SIR படிவங்களில் கையொப்பமிட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நகராட்சி ஆணையர் தாமரையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.