erode 
மாவட்ட செய்திகள்

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

அதிமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Web Team

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே, கள்ளிப்பட்டியில் அதிமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியில் நடந்த முதல் பூத் கமிட்டி கூட்டத்தில், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஏ.கே.செல்வராஜ் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ், அதிமுகவிற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் துரோகம் இழைத்து விட்டு இன்று அதிமுகவையும், பொது செயலாளரையும் கொச்சைப்படுத்தி வருகிறார், வருகிற தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில், இபிஎஸ் யாரை வேட்பாளராக அறிவிக்கின்றாரோ, அவரை வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், கோபிசெட்டிபாளையத்தில் புதிய அதிமுக அலுவலகத்தை வருகிற 10ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு திறந்து வைக்கிறார் என்றும் தெரிவித்தார்.