jothi 
மாவட்ட செய்திகள்

வள்ளலார் சத்திய ஞான சபையில் ஐப்பசி மாத ஜோதி தரிசனம்

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடைபெற்ற ஐப்பசி மாத ஜோதி தரிசனத்தில் பக்தர்கள் ஜோதி தரிசனம் கண்டனர்.

Web Team

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடைபெற்ற ஐப்பசி மாத ஜோதி தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் கண்டனர். ஐப்பசி மாத பூச நட்சத்திரத்தை முன்னிட்டு, சத்திய ஞான சபையில் 6 திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் மேற்கொண்டனர்.