கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற தாசில்தார் மற்றும் துணை தாசில்தாரர்கள் மீது ஜேசிபியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தரங்கரை பெண் தாசில்தார் ராஜலட்சுமி, துணை தாசில்தாரர்கள் சகாதேவன், ஜெயபால் ஆகியோர் சென்ற கார் மீது ஜேசிபியின் பக்கெட்டை வைத்து மோதியதாக கூறப்படுகிறது.