11 
மாவட்ட செய்திகள்

அனல் பறந்த ரேக்ளா பந்தயம்.. சீறிப்பாய்ந்த காளைகள்.. கண்டு ரசித்த மக்கள்

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே, நடைபெற்ற ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Srini Vasan

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே, நடைபெற்ற ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தொண்டாமுத்தூர் பகுதியில் ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில், 400 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், ஏராளமான வீரர்களும் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

இதில், வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு ரொக்கமாக முதல் பரிசு ரூ.50,000 மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்கள், கோப்பை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.