Anganwadi protest 
மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்

இளநிலை உதவியாளர்களுக்கு வழங்குவது போல் அடிப்படை ஊதியம் 19 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அடிப்படை ஊதியம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், ஓய்வூதியமாக 6 ஆயிரத்து 750 ரூபாய் வழங்கிட வேண்டும் எனவும், இளநிலை உதவியாளர்களுக்கு வழங்குவது போல் அடிப்படை ஊதியம் 19 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.