2026 சட்டமன்ற தேர்தல் பயத்தால் அதிமுக பாஜக கூட்டணிக்கு விஷக்காய்ச்சல் வந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டத்தை துவக்கி வைத்து பங்கேற்ற பின், செய்தியாளரை சந்தித்த அமைச்சர், திங்கட்கிழமை நடந்த திருச்செந்தூர் சுப்பிரமணிசுவாமி கும்பாபிஷேகத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து அதிமுகவினர் மிரண்டு போயுள்ளதாகவும், மீண்டும் திமுக ஆட்சி அமைய நெல்லையப்பர் அருள்பாலிப்பார் எனவும் கூறினார்.