அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான வேல்ராஜ், ஓய்வு பெற இருந்த நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றிய வேல்ராஜின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், ஓய்வு பெறும் வயது இல்லாததால், தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அவர் துணை வேந்தராக இருந்தபோது, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், இந்த வழக்கை காரணம் காட்டி, ஓய்வு பெறும் நாளில் வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.