magamagam 
மாவட்ட செய்திகள்

மகாமக திருக்குளத்தை சுற்றி, அன்னாபிஷேகம்

மகாமக திருக்குளத்தை சுற்றிலும் 16 சோடச மகாலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

Web Team

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தை சுற்றிலும் 16 மண்டபங்களில் அமைந்துள்ள 16 சோடச மகாலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. உலக புகழ்பெற்ற மகாமக குளத்தை சுற்றியுள்ள பிரம்மதீர்ததேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர் என மொத்தம் 16 சிவலிங்கங்களுக்கு ஐப்பசி பௌர்ணமி தினத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிறைவாக, அன்னத்தை கொண்டு சிவலிங்க மேனியில் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து அன்னத்தால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்க திருமேனிக்கு மகா தீபாராதணை செய்யப்பட்டது, இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.