16 
மாவட்ட செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்த்திருவிழா.. கிறிஸ்தவ பெருமக்கள் பங்கேற்று வழிபாடு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில், அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Srini Vasan

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில், அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

அன்னை வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா, கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

வண்ண விளக்குகள், வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த அன்னை மாதாவை, கிறிஸ்தவப் பெருமக்கள் திரளானோர் வழிபாடு செய்தனர்.