8 
மாவட்ட செய்திகள்

அண்ணன் - தங்கை இடையேயான சொத்துப் பிரச்சனை... போலீசார் முன்னிலையில் கரும்பு பயிர் டிராக்டர் மூலம் அழிப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அண்ணன் - தங்கை இடையேயான சொத்துப் பிரச்சனையில் போலீசார் முன்னிலையில் கரும்பு பயிர் டிராக்டர் மூலம் அழிக்கப்பட்டது.

Srini Vasan

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அண்ணன் - தங்கை இடையேயான சொத்துப் பிரச்சனையில் போலீசார் முன்னிலையில் கரும்பு பயிர் டிராக்டர் மூலம் அழிக்கப்பட்டது.

மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடபதி, தனது மகள் சித்ராவுக்கு 1 ஏக்கர் 27 சென்ட் நிலத்தை எழுதிக்கொடுத்துள்ளார்.

சித்ரா வெளியூரில் இருப்பதால், அந்த நிலத்தை சகோதரர் ரமேஷ் பாபு, நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ராமலிங்கத்துக்கு குத்தகைக்கு விட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சித்ரா நிலத்தை அளவீடு செய்து கல் நடுவதற்கு உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி சம்பவ இடத்திக்கு சென்ற அதிகாரிகள் நிலத்தை சுற்றி கல் நட்ட பின், போலீசார் முன்னிலையில் கரும்பு பயிர் அழிக்கப்பட்டது.