7 
மாவட்ட செய்திகள்

ஊதியம் கேட்ட பெண் மீது தாக்குதல்... கன்னத்தில் அறைந்த அழகு நிலைய உரிமையாளர்

தருமபுரி மாவட்டம் இலக்கியபட்டியில் ஊதியம் கேட்ட பெண்ணை அழகு நிலைய உரிமையாளர் கன்னத்தில் அறைந்ததால் பாதிக்கப்பட்டவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

Srini Vasan

தருமபுரி மாவட்டம் இலக்கியபட்டியில் ஊதியம் கேட்ட பெண்ணை அழகு நிலைய உரிமையாளர் கன்னத்தில் அறைந்ததால் பாதிக்கப்பட்டவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

அண்ணா நகரைச் சேர்ந்த வெற்றிச்செல்வி, இலக்கியம்பட்டியில் உள்ள ஷகிலா என்பவருக்கு சொந்தமான பெண்கள் அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த 10 மாதமாக சம்பளம் வழங்காமல் உரிமையாளர் ஷகிலா அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண், தனது தோழியுடன் அழகு நிலையத்துக்கு சென்று சம்பளம் குறித்து கேட்டபோது ஷகிலா இருவரையும் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.