திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை அரை மணி நேரத்திலேயே உயிரிழந்ததால், தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியை சேர்ந்த முகமது வசிம் என்பவரது மனைவி சீமா பர்வீனுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை பிரசவவலி ஏற்பட்டு,
உமராபாத் பகுதியிலுள்ள ஜாமியா மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலில் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் எனக் கூறிய மருத்துவர்கள்,
மாலை 5 மணியளவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கையெழுத்து வாங்கிய நிலையில், குழந்தை பிறந்து,
அரை மணி நேரத்திலேயே இறந்து விட்டதாக கூறியதால் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர்.