அதி கனமழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க ஏழாவது நாளாக தடை நீடிக்கிறது.
தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.