12 
மாவட்ட செய்திகள்

குடியிருப்புகளுக்கு அருகே உலா வந்த கரடிகள்.. 4 கரடிகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரவு நேரத்தில் குடியிருப்புகளுக்கு அருகே கரடிகள் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரவு நேரத்தில் குடியிருப்புகளுக்கு அருகே கரடிகள் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பெரியார் நகர் பகுதியில் இரவு நேரத்தில் 4 கரடிகள் உலா வந்தது, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.