திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் டீக்கடையில் செல்போன் திருடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. தேவராஜபுரம் பகுதியில் கந்தன் என்பவர் நடத்தி வரும் டீக்கடைக்கு வந்த நபர், இயல்பாக பேசி பழகி யாரும் கவனிக்காத நேரத்தில் செல்போனை திருடி சென்றுள்ளார்.
போலீசார் செல்போனை தொடர்பு கொண்டதும் பயந்து போய் அந்த நபர் செல்போனை சாலையோரம் வீசிவிட்டு தப்பியுள்ளான்.