RPT Sir issue 
மாவட்ட செய்திகள்

கல்லூரி ஊழியர்களை வைத்து SIR படிவத்தை வழங்க முகாம்

SIR படிவத்தை வழங்கியதோடு, இது குறித்து கேள்வி எழுப்பிய வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ

Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் திமுக நகர மன்ற தலைவரின் கணவர் கல்லூரி ஊழியர்களை வைத்து முகாம் நடத்தி SIR படிவத்தை வழங்கியதோடு, இது குறித்து கேள்வி எழுப்பிய வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

14-வது வார்டு திமுக உறுப்பினர் அசோகன் அவருடைய கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்களை வைத்து முகாம் நடத்தி SIR படிவத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது 17-வது வார்டு திமுக உறுப்பினர் அன்பரசனும் இணைந்து படிவத்தை வழங்கிய நிலையில், இது குறித்து வட்டாட்சியர் செல்வி கேள்வி எழுப்பியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.