Nellai District 
மாவட்ட செய்திகள்

218 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா அழிப்பு... சுமார் 953 கிலோ கஞ்சாவை அழித்த போலீசார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 953 கிலோ கஞ்சாவை போலீசார் அழித்தனர்.

Web Team

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 953 கிலோ கஞ்சாவை போலீசார் அழித்தனர்.

மதுரை மாநகரத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 218 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 953 கிலோ கஞ்சா விஜயநாராயணம்,

அடுத்த பொத்தையடி கிராமத்தில் உள்ள பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் கம்பெனிக்கு கொண்டு வரப்பட்டது.

மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையிலான போலீசார் கஞ்சாவை தீயில் இட்டு அழித்தனர்.