Krishnagiri 
மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குடிசை வீட்டில் பாய்ந்த கார்... குடிசை வீடு சேதம்; வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த 2 மாடுகள் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த குடிசை வீட்டில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த 2 மாடுகள் பரிதாபமாக இறந்தன.

Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த குடிசை வீட்டில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த 2 மாடுகள் பரிதாபமாக இறந்தன.

வீரியம்பட்டி கூட் ரோடு பகுதியில் வசித்து வரும் விவசாயி சின்னராஜ், தனது மாடுகளை வழக்கம் போல் வீட்டின் அருகே கட்டி விட்டு தூங்கச் சென்றார்.

இரவு 12.30 மணியளவில் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சின்னராஜின் வீட்டிற்குள் புகுந்தது.