மாலத்தீவில் நடைபெற்ற 7ஆவது கேரம் போர்டு உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்ற புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தங்க மங்கை கீர்த்தனாவுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்தவெளி காரில் ஊர்வலமாக வந்த கீர்த்தனாவை மேள தாளங்களுடன், ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்றனர்.