Mathur accident 
மாவட்ட செய்திகள்

கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

காரும் - இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி

Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே காரும் - இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஊத்தங்கரையில் இருந்து ரமேஷ், அவரது மனைவி சத்யா ஆகியோர் மத்தூர் வழியாக சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது அவர்களின் கார் மோதியது. இதில் ஜோகிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் உயிரிழந்தார்