சென்னை கிழக்கு தாம்பரத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் கார் மோதி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சித்தலப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராணி கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில் வேளச்சேரி சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது மேடவாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார்.
பின்னர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் யோகேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.