MYD Samba 
மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் சம்பா பயிர்கள் பாதிப்பு

பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் அறிவித்து 10 மாதங்கள் கடந்தும் வழங்கப்படவில்லை

Web Team

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தாத தமிழக அரசுக்கு, விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், மழையால் சேதமடைந்த சம்பா நாற்றுகள் மற்றும் வேளாண் துறை அமைச்சரின் புகைப்படத்துடன் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மாதம் முதல் தற்போது வரை 2 முறை கனமழை பெய்து பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் அறிவித்து 10 மாதங்கள் கடந்தும் வழங்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவித்தனர்.