சமூக வளைகாப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட சமூக நலன் துறை அலுவலர் சங்கீதா மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் தலைமையில் நடைபெற்றது.
கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியினை பார்வையிட்ட பின்னர், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, வளையல், மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை அனைவருக்கும் வழங்கினார்.
230 கர்ப்பிணிகளுக்கு...
திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட திருப்போரூர்,கேளம்பாக்கம், புதுப்பாக்கம்,மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 230 கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தையூர் எஸ்.குமரவேல், மாநில துணைப் பொதுச் செயலாளர் தீனா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகையான உணவு வகைகளை பரிமாறினார்.