வீராங்கனைகள் அசத்தல்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த பையனூரில் இயங்கி வரும் விநாயகா மிஷன் பல்கலைக்கழக வளாகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி துவங்கியது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களில் இருந்து 50 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 25 வயதிற்குட்பட்ட 300க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில், 49 கிலோ, 53 கிலோ, 57 கிலோ, 85 கிலோ அதற்கு மேலும் என 8 பிரிவுகளாக நடைபெறுகிறது. வருகின்ற 20ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டிகள் 21ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெறும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர், நிகழ்ச்சியில் பல்கலைகழகத்தின் இயக்குனர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவியர் என பலர் கலந்து கொண்டனர்.