மாடல் அழகி புகார் நியூஸ்தமிழ்24x7
சென்னை

மோசம் போய் விட்டேன் - மாடல் அழகி மனக்குமுறல்

சென்னை, அம்பத்தூரில் காதல் வலையில் வீழ்த்தியும், திருமணம் செய்வதாகக் கூறியும் ரூ.10 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தமிழ்நாடு பேஷன் அழகிப் போட்டி சங்கத் தலைவர் மீது மாடல் அழகி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Azhagiri Arumugam

"வாய்ப்பு வழங்க வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும்," என பல பெண்களை மிரட்டியுள்ளதாகவும் மாடல் அழகி குற்றம்சாட்டும் நிலையில் சில ஆடியோ ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.

காதல் மோசடி

'மிஸ் சென்னை 2025'

ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டு அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமுமே இல்லாததுபோல் சிரித்துக்கொண்டே கெத்தாக காவல் நிலையத்திற்குள் செல்லும் ஃபேஷன் நிறுவன தலைவர் மீது ஆக்சன் எடுக்க வேண்டிய போலீசார், கார் வரை வந்து வழியனுப்பி வைப்பதை என்ன சொல்வது? அப்படி இருந்தால் நியாயத்தை தான் எதிர்பார்க்க முடியுமா? என்பதே இந்த மாடல் அழகியின் மனக்குமுறல்.

'மிஸ் சென்னை 2025'

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி புவனேஷ்வரி. தமிழ்நாடு பேஷன் போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் - TNFPA நடத்திய போட்டியில், 'மிஸ் சென்னை 2025' என்ற பட்டத்தை வென்ற இவரை இன்ஸ்டாவிலும் லட்சக்கணக்கனோர் ஃபாலோ செய்கின்றனர்.

மாடல் அழகி, நடிகை...

ஃபேஷன் துறையில் ஆர்வம் கொண்ட இவர் 'டிரீம் ஷேடோ ஃபேஷன்ஸ்' Dream Shadow Fashions என்ற நிறுவனமும் நடத்தி வருகிறார். சி.வி.குமார் இயக்கத்தில், 'மாயவன் சினிமாடிக் யுனிவர்ஸ்' வரிசையில் உருவாகும் 'XY' என்ற அறிவியல் புனைக்கதை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், மாடல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வரும் 'SIFPA' என்ற ஃபேஷன் நிறுவனத்தின் தலைவர் வினோத் சிரஞ்சீவி என்பவர் மீது புவனேஷ்வரி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பணமோசடி புகார்

காதல், பண மோசடி

விசாரணைக்கு வந்த மாடல் அழகி, வெளியே வந்து செய்தியாளர்களிடம் தனது வருத்தத்தை கொட்டி உள்ளார். இன்ஸ்டாவில் உள்ள தனது போட்டோக்களை பார்த்துவிட்டு தொடர்பு கொண்ட வினோத் சிரஞ்சீவி, தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாகக்கூறி ரூ.10 லட்சம் பெற்றுவிட்டு விபூதி அடித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

தன்னைப்போன்றே நிறைய பெண்களை அவர் காதல்வலையில் வீழ்த்தியதாகவும், அதற்கு ஆதாரமாக சில ஆடியோக்களையும் காட்டும் புவனேஷ்வரி, தனது நகைகளை விற்றுதான் ரூ.10 லட்சத்தையே கொடுத்ததாகவும் கூறினார்.

காவல்துறை மீது குற்றச்சாட்டு

பல பெண்களை ஏமாற்றிவிட்டு, வீட்டில் வரன் பார்த்த வேறொரு பெண்ணை திருமணம் செய்த வினோத் சிரஞ்சீவி, ஆண்களிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களை அடியாட்கள் மூலம் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் குற்றம்சாட்டிய மாடல் அழகி, அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என பலரை மிரட்டியுள்ளதாகவும் கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு

எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் ’தற்கொ* செய்து கொள்வேன்,’ எனக்கூறியபோது ’செத்தால் சாவு,’ என வினோத் சிரஞ்சீவி கூறியதாக தெரிவித்த மாடல் அழகி, ஆதாரம் இருந்தும் அம்பத்தூர் போலீசார் வினோத் சிரஞ்சீவிக்குதான் சப்போர்ட் செய்வதாகயும் குற்றம்சாட்டினார்.

நடிகையாக புவனேஷ்வரி

போலீஸ் பாதுகாப்புடன்...

இதனிடையே, புவனேஷ்வரியின் புகார் குறித்து விசாரணைக்காக காவல் நிலையம் வந்த வினோத் சிரஞ்சீவியை சிலர் வீடியோ எடுத்தனர். அப்போது சிரித்தபடியே கூலாக வந்த அவர், செய்தியாளர்களின் கேள்விகளையே கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றார். இதில், குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் அவரை போலீசாரே பாதுகாப்பாக கார்வரை வந்து வழியனுப்பி வைத்ததுதான்.

இதுஒருபுறமிருக்க, புவனேஷ்வரியின் புகாரில் உண்மையில்லை எனவும் தன்மீது தவறு இல்லாததால்தான் சிரித்தடிபடியே காவல் நிலையம் சென்றதாகவும் நியூஸ் தமிழ் செய்தியாளரிம் செல்போனில் விளக்கம் அளித்த வினோத் சிரஞ்சீவி, பணம் பறிக்க மாடல் அழகி நாடகம் போடுவதாகவும், அதனை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தயார் எனவும் கூறியுள்ளார்.

மாடல் அழகி புகார்