அதிர்ச்சி புகார்  நியூஸ்தமிழ்24x7
சென்னை

மெரினா சந்திரமோகனின் ''போதை'' அலப்பறை

சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் காரை நிறுத்தி ரகளை செய்து, போலீசாருக்கே சட்டப் பாடம் எடுத்து கம்பி எண்ணிய மெரினா சந்திரமோகன் மீது கொ* மிரட்டல் புகார் எழுந்திருக்கிறது.

Azhagiri Arumugam

பக்கத்து வீட்டு பெண்ணை ஆபாசமாக பேசி கொ* மிரட்டல் விடுத்த மெரினா சந்திரமோகனுக்கு மீண்டும் ஜெயில் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அன்று மெரினாவில்...

அன்று... மெரினாவில்...

நள்ளிரவில் தோழியுடன் ஜாலியாக இருக்கும் போது, இடையூறு செய்த போலீசாருக்கு எதிராக பிரளயத்தையே கிளப்பி, மன்னிப்புக் கேட்ட மெரினா சந்திரமோகனை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த சந்திரமோகன் மீது தான் தற்போது கொ* மிரட்டல் புகார் எழுந்திருக்கிறது.

கடந்த 2024ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. நள்ளிரவில் ரோந்து பணியில் இருந்த போலீசார் காரை எடுக்கச் சொல்லி அறிவுறுத்த, காருக்குள் இருந்து சூப்பர் ஹீரோ போல பொங்கி எழுந்தவர் தான் இந்த சந்திரமோகன்.

சமூகவலைதளத்தில்...

தோழி தனலட்சுமியுடன் ரகசிய உரையாடலில் இருந்த சந்திரமோகன், இடையூறு போலீசாரை பார்த்து டென்ஷன் ஆகி வானத்துக்கும் பூமிக்கும் குதித்த வீடியோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் நம்பர் ஒன் டிரெண்டாக மாறின.

போலீசாரை சரமாரியாக ஆபாசமாக பேசியதோடு, போலீசார் முன்பே தோழி தனலட்சுமியை கொஞ்சி குலாவ, பதிலுக்கு தோழியும் போலீசாருக்கு எதிராக எகிற என ரணகளத்தின் உச்சமாக இருந்தது அந்த ஜோடியின் அலப்பறை.

மிரட்டல் புகார்

ஆனால், ராத்திரியில் அலப்பறையை கிளப்பிய அந்த ஜோடி காலையில் மது போதை தெளிந்ததும், நிதானம் இல்லாமல் பேசிவிட்டதாக வருந்தி மன்னிப்பு கேட்கும் நிலைக்கு ஆளானது. ஆனாலும், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மெரினா ஜோடியை போலீசார் சிறையில் தள்ளினர். பின்னர், உயர்நீதிமன்றம் தான் மெரினா ஜோடிக்கு ஜாமீன் வழங்கி விடுவித்தது.

ஒரே இரவில் ’பேமஸ்...’

ஒரே இரவில் WORLD பேமஸ் ஆன மெரினா சந்திரமோகன் மீது மீண்டும் ஒரு புகார் எழுந்திருக்கிறது. சந்திரமோகன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண் அளித்துள்ள அந்த புகாரில், வீடு புகுந்து ஆபாசமாக பேசியதோடு, கொ* மிரட்டல் விடுப்பதாக கூறப்பட்டுள்ளது. அதோடு, மொட்டை மாடியில் நின்று குடித்து விட்டு ஆபாசமாக பேசி அநாகரீகமாக நடந்து கொள்வதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மெரினா சந்திரமோகன், பக்கத்து வீட்டு பெண்ணிடம் வம்பிழுத்து சண்டை போடும் வீடியோ ஆதாரமும் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மகன் தடுத்து நிறுத்த முயன்றும் எகிறிக் கொண்டு சண்டைக்கு செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

சந்திரமோகன்

மெரினா சந்திரமோகன், வம்பு சந்திரமோகனாக மாறி பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்திருக்கும் நிலையில், பெண்ணின் புகார் மீது உரிய விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை எடுத்து சந்திரமோகனை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.