சென்னை

சென்னை அடையாறு சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி

சென்னையில் நடு ரோட்டில் பட்டப்பகலில் ஆட்டோவில் வைத்து ரவுடி வெட்டிக் கொ* செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ரவுடி உயிருக்கு ஆபத்து என இரு உளவு அமைப்புகள் எச்சரித்தும் கூட மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் கண்டு கொள்ளாமல், கடமை தவறியதால் இந்த சம்பவம் அரங்கேறியிருக்க, கொ*க்கான பின்னணி என்ன?

Azhagiri Arumugam

அதிர வைக்கும் சம்பவம்

HOT OF THE CHENNAI என்று சொல்லக்கூடிய ஏரியாக்களில் அடையாறும் ஒன்று. எப்போதுமே பிஸியாக இயங்கும் அடையாறில் நடு ரோட்டில் நிகழ்ந்த கொ* தான் மக்களை நடுநடுங்க வைத்திருக்கிறது.

சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை திடீரென வழிமறித்து சுத்துப் போட்ட 3 பேர் கொண்ட கும்பல், ஆட்டோவுக்குள் இருந்த இளைஞரை சரமாரியாக வெட்டிக் கொ* செய்து விட்டு பைக்கில் தப்பியோடியது.

எந்த பயமும் இல்லாமல் நிதானமாக அரிவாளை எடுத்துக் கொண்டு கொ*யாளி ஒருவன் பைக்கில் ஏறிச் செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

அடையாறு

யார் இந்த மைத்ரேயன்

பட்டப்பகலில் இளைஞர் கொ* செய்யப்பட்டு கிடக்க, சம்பவ இடத்திற்கு

சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கொ* செய்யப்பட்ட இளைஞர், சரித்திர பதிவேடு குற்றவாளியான சி கேட்டகரி ரவுடி மைத்ரேயன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2024ஆம் ஆண்டு மயிலாப்பூரில் வைத்து சக ரவுடி ஒருவனை இளநீர் சீவுவது போல தலையை சீவி கொ* செய்திருக்கிறான் மைத்ரேயன்.

கொ*யான ரவுடியின் நண்பனான ஜீவா என்பவன் மைத்ரேயனை பழிவாங்க நேரம் பார்த்து காத்திருந்த நிலையில், மற்றொரு குரூப்பும் மைத்ரேயனுக்கு ஸ்கெட்ச் போட்டிருந்திருக்கிறது. மைத்ரேயனின் நெருங்கிய கூட்டாளியான சூசை என்ற அஸ்வந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு கொ* செய்யப்பட்ட நிலையில், அஸ்வந்தை கொ* செய்த குரூப் மைத்ரேயனுக்கும் வலை விரித்திருக்கிறது.

அடையாறு

காவல் நிலையம் செல்லும் வழியில்...

சிறையில் இருந்து வெளியே வந்த மைத்ரேயன் எப்படியும் நண்பன் சூசைக்காக பழிவாங்கக் கூடும் என சுதாரித்த கும்பல், அதற்கு முன்பாக முந்திக் கொண்டு மைத்ரேயனை கொ* செய்ய திட்டம் போட்டு கதையை முடித்திருக்கிறது. பெரியார் நகரில் நண்பன் வீட்டில் இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது தான் இடையிலேயே வழிமறித்து கொ* செய்திருக்கிறது அந்த கும்பல்.

எச்சரித்த கிரைம் செல்

வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்த மைத்ரேயன் கடந்த 15ஆம் தேதி தான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். ஜாமீனில் வெளியே வந்த ரவுடி மைத்ரேயனை கொ* செய்ய சதி திட்டம் தீட்டப்படுவதாக தமிழ்நாடு போலீசின் ORGANIZED CRIME INTELIGENCE UNIT என்று சொல்லக்கூடிய அமைப்பும், சென்னை போலீசின் ORGANIZED crime cell அமைப்பும் எச்சரித்து, மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் ரவிக்கு தகவல் அனுப்பியிருக்கிறது.

அடையாறு

16ஆம் தேதி இரு உளவு அமைப்புகளும் வார்னிங் கொடுத்த நிலையில், காவல் ஆய்வாளர் ரவி கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப் படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே மூன்று முறை ATTEMPT செய்து நான்காவது முறை தான் சதித் திட்டம் பலித்திருக்கிறது.

மயிலாப்பூரில் வைத்தே இரு முறை ரவுடி மைத்ரேயனை கொ* செய்ய முயன்ற நிலையில், அப்போதும் ஆய்வாளர் ரவி கண்ணையும், காதையும் இறுக்க மூடிக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குற்றவாளிகள் சரண்

அதுமட்டுமல்லாமல், ரவுடி மைத்ரேயனை கொ* செய்த கும்பல் நேராக மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் ரவியிடம் சென்று சரண் அடைந்திருக்கிறது. காவல் ஆய்வாளர் ரவி மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள்

இருக்கும் நிலையில், தற்போது INTELIGENCE எச்சரித்தும் குற்றத்தை தடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்திருக்கிறது.

அடையாறு

காவல் ஆய்வாளருக்கு...

உளவு அமைப்புகள் கொடுத்த வார்னிங்கை ஆய்வாளர் உதாசீனப்படுத்தியது ஏன்? ரவுடிகள் கேங்குக்கும் ஆய்வாளருக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? கொ*யாளிகள் நேராக வந்து ஆய்வாளரிடம் சரண்டர் ஆனதின் பின்னணியில் உள்நோக்கம் இருக்கிறதா? என்பதையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனவே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இருந்து தென் மாவட்டத்திற்கு டிரான்ஸ்பர் ஆகி சென்ற இன்ஸ்பெக்டர் ரவி, மீண்டும் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கே வந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், குற்றம் நடக்காமல் தடுக்க வாய்ப்பு இருந்தும் கோட்டை விட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.