கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்து கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிந்தான். ராம்பாக்கத்தை சேர்ந்த நாகராஜ் மகன் நிர்மல்ராஜ், பள்ளி வார விடுமுறையையொட்டி, அங்குள்ள ஆற்றில் ஆழமான இடத்திற்கு சென்று குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.