DMP Dharmapuri 
மாவட்ட செய்திகள்

பாப்பிரெட்டிபட்டி திமுக பேரூராட்சி தலைவருக்கு மீது புகார்

கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பேரூராட்சி நிதியிலேயே செய்வதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

Web Team

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி அவரை மாற்ற வேண்டும் என அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். பேரூராட்சி தலைவர் மாரி, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல், தான் ரியல் எஸ்டேட் செய்து வரும் இடங்களில் வீட்டுமனைகளை விற்பனை செய்வதற்காக அங்கு சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பேரூராட்சி நிதியிலேயே செய்வதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.