திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு கொடுத்த பழைய 100 ரூபாய் தாள் செல்லாது எனக் கூறி கடை ஊழியர், பணத்தை முகத்தில் வீசி எறிந்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
100 ரூபாய் வாங்க மறுப்பது குறித்து கேட்ட தன்னையும், தனது மனைவியையும் அவதூறாக பேசிய கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தினகுமார் என்பவர் தெரிவித்துள்ளார்.