திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே காதலியின் தந்தை செருப்பால் அடித்த அவமானத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளாம்பட்டியை சேர்ந்த ராஜதுரை உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணின் தந்தை மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசாரும் உறுதியளித்துள்ளனர்.