இராணிப்பேட்டை அருகே குடும்ப சண்டை காரணமாக பெற்றோர் தன்னை வீட்டில் இருந்து வெளியேறுமாறு கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக, இளம்பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஆற்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த மோனிகா என்பவர், வீட்டிற்காக வங்கியில் வாங்கிய கடனை தாம் அடைத்து வருவதாகவும், குடும்பத் தகராறு காரணமாக தாயார் ராதா மற்றும் தந்தை சேட்டு ஆகியோர், தனது தங்கையின் கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் கணவருடன் சேர்ந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுமாறு அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார்.