தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஓமல் நத்தம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வெறிநாய்களை ஏவி விட்டு, தான் வளர்த்து வரும் ஆடுகளை கடிக்க விட்டதாக பெண் விவசாயி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.