தூத்துக்குடி விஇ சாலை நடைபாதையில் நின்று கொண்டிருந்த கட்டட தொழிலாளர்கள் மீது மதுபோதையில் காரை விட்டு ஏற்றியதில் 3 பேர் காயமடைந்தனர்.
கட்டட வேலைக்கு செல்வதற்காக நடைபாதையில் தொழிலாளர்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் மீது மதுபோதையில் காரை இயக்கி நபர் மோதினார்.
பின் இருசக்கர வாகனம் மீதும், டீக்கடையின் மீதும் மோதி கார் நின்றது.
இதனையடுத்து கார் ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.