Amaravathi Dam 
மாவட்ட செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை... அமராவதி அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 17 அடி உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் மூன்று நாட்களில் 17 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Web Team

90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி 68.5 அடியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரத்து 769 கன அடியாக உள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை நீடிப்பதால் நீர்வளத் துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் இரவு பகலாக அணையை கண்காணித்து வருகின்றனர்.