22 
மாவட்ட செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை.. குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க தடை

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் குற்றாலத்திற்கு படையெடுத்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.